×

சிங்காரச் சென்னை 2.0 திட்டம் தொடங்கப்படும்..மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் சேவை : தமிழக நிதியமைச்சரின் அசத்தல் அறிவிப்புகள்!!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ- பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.2021-2022க்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரை ஆற்றினார்.

 பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பட்ஜெட் உரையில் இடம்பெற்றவை:

*ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் கலைஞரின் நமக்கு நாமே திட்டம் மீண்டும் துவங்கப்படும்
*ஊரக வாழ்வாதாரத்திட்டம் புதுப்பிக்கப்பட்டு 36218 மகளிர் குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூ.809.79 கோடி ஒதுக்கீடு
*அனைத்து மாநகராட்சிகளிலும் ஒரு நபருக்கு தினசரி 135 லிட்டர் குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும்
*அனைத்து நகராட்சிகளிலும் ஒரு நபருக்கு தினசரி 90 லிட்டர் குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும்
*அனைத்து பேரூராட்சிகளிலும் ஒரு நபருக்கு தினசரி 70 லிட்டர் குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும்

*நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள மண் சாலைகள் மேம்படுத்தப்படும்
*ரூ.1000 கோடியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்படும்
*சீர்மிகு நகரங்கள் திட்டங்களுக்கு ரூ.2350 கோடி ஒதுக்கீடு
*அம்ருத் திட்டத்தை செயல்படுத்த ரூ.140 கோடி ஒதுக்கீடு
*கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் வெள்ள நீர் வடிகால் அமைப்புக்கு ரூ.87 கோடி

*பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக சென்னை மாற்றப்படும்
*சென்னையில் 3 இடங்களில் ரூ.335 கோடியில் மேம்பாலங்கள் அமைக்கப்படும்
*சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் திட்டத்திற்கு ரூ.2371 கோடி
*சென்னையுடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.2056 கோடி
*சுவரொட்டி இல்லாத நகர் சென்னை ரூ.1000 கோடியில் நகர்பற மேம்பாட்டு திட்டம்
*சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்
*உயிரியல் அகழ்ந்தெடுப்பு முறையில் சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கு மீட்டெடுக்கப்படும்
மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நடைபாதைகள் மேம்படுத்தப்படும்

*நகர்புற ஊதிய வேலை வாய்ப்பு திட்டம் எனும் புதிய திட்டம் அறிமுகம் - ரூ.100 கோடி ஒதுக்கீடு
*நகர்புறங்களில் நீர்நிலைகள் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க நகர்புற ஏழைகள் பயன்படுத்தப்பட்டு ஊதியம்
*மதுரை, கோவை - திருப்பூரில், ஓசூரில் புதிய பெருநகர வளர்ச்சிக்குழுமங்கள் ஏற்படுத்தப்படும்
*10 வருடங்களுக்குள் தமிழகம் முற்றிலும் குடிசைகள் அற்ற மாநிலமாக விளங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது
*குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3954.44 கோடி ஒதுக்கீடு
*புதிய குடிசை மறுகுடியமர்வு மற்றும் புனர்வாழ்வுக் கொள்கை உருவாக்கப்படும்

*நாட்டிலேயே அதிக அளவிலான தார் சாலைகள் தமிழகத்தில் தான் உள்ளன
*சாலை கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.5421.41 கோடி ஒதுக்கீடு
*59 நகராட்சிகளில் புறவழிச்சாலை அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்
*சென்னை - கன்னியாகுமரி ஜிஎஸ்டி சாலையை 6 முதல் 8 வழிச்சாலையாக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்
*மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட நெடுஞ்சாலைகளுடன் இணைக்க கூடிய 2200கிமீ சாலைகள் 4 வழிச்சாலையாக்கப்படும்
*நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899.17 கோடி ஒதுக்கீடு

*சென்னை - குமரி தொழில் பெருவழித்திட்டத்தின் கீழ் ரூ.6448.24 கோடியில் 589கிமீ நீள பெருவழிகள் மேம்படுத்தப்படும்
*ரூ.623.59 கோடியில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் 1000 புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு
*மெட்ரோ ரயில் திட்டத்தில் கோடம்பாக்கம் - பூந்தமல்லி புறவழித்தட சேவைகள் 2025 ஜூன் மாதம் துவங்கும்
*மெட்ரோ ரயிலின் மொத்த 2ம் கட்டமும் 2026ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்படும்
*மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறுகள் அறிக்கை தயார் செய்யப்படும்
*கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவில் தொடங்க மத்திய அரசுடன் ஆலோசிக்கப்படும்
*சென்னை விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக கிளம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கும் பணி விரைவாக தொடங்கப்படும்

Tags : Singarach ,Metro Rail Service ,Madurai , மெட்ரோ ரயில்
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை