×

பிளீச்சிங் பவுடர் குடோனில் தீ விபத்து

பூந்தமல்லி: பூந்தமல்லி கரையான்சாவடியில் அரசு பொதுசுகாதார நிறுவனம் உள்ளது. தமிழகம் முழுவதிலும் இருது இங்கு வந்து தங்கி பயிற்சி பெற்றுச்செல்கின்றனர். இந்தநிறுவனவளாகத்தில் ஒரு குடோனில் 300க்கும் மேற்பட்ட பிளீச்சிங் பவுடர் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. குடோனிலிருந்து நேற்று திடீரென புகை வந்தது. உடனே ஊழியர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே அங்கிருந்த பிளீச்சிங் பவுடர் மூட்டைகள் தீப்பிடித்து எரியத்தொடங்கின. பூந்தமல்லி, மதுரவாயல், எழும்பூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

பிளீச்சிங் பவுடர் மூட்டைகள் எரிந்ததால் அதிலிருந்து வெளிப்பட்ட புகை கடும் நெடியுடன் பரவியது. இதனால் அங்கிருந்த ஊழியர்களுக்கு கண்எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. 5 தீயணைப்பு வீரர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் சுவாசப் பிரச்சனை ஏற்படாமல் இருக்க தீயணைப்புவீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் மாஸ்க் அணிந்து கொண்டு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப்பிறகு தீ அணைக்கப்பட்டது.


Tags : Kuton , Bleaching powder, cotton, fire accident
× RELATED செங்குன்றம் அருகே குடோனில் பதுக்கிய 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 5 பேர் கைது