×

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பயந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் மருத்துவமனையில் அனுமதி..!!

கோவை: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பயந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக புகார் கூறப்பட்டது. இதனிடையே ஒப்பந்தப்பணி தருவதாக ரூ.1.25 கோடி பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சென்னை காவல் ஆணையரிடம் நேற்று ஒப்பந்தக்காரர் புகார் அளித்திருந்தார்.

இதை தொடர்ந்து, இன்று காலை முதல் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  2014 முதல் 2018 வரை நடந்த பல்வேறு திட்டப்பணிகளில் முறைகேடு என்று புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள், செந்தில் அண்ட் கோ பங்குதாரர் அன்பரசன், கே.சி.பி. என்ஜினீயர்ஸ் வேளாண் இயக்குனர் சந்திரபிரகாஷ்  என மொத்தம் 17 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு அஞ்சி எஸ்.பி.வேலுமணியுடன் குற்றம்சாட்டப்பட்ட கே.சி.பி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். டெண்டர் முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்ட சந்திரபிரகாஷ் கே.சி.பி. என்ஜினியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார். லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் பட்டியலில் சந்திரபிரகாஷ் 4வது இடத்தில்  உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Langsa ,Minister S. RB Valencia , Corruption Eradication Test, SB Velumani, Friend, Hospital
× RELATED நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை