×

சேலம் மாநகர பகுதிகளில் மாலை 6 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள்

சேலம்: சேலம் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றைக் கட்டுக்குள் வைக்கும் பொருட்டு கட்டுப்பாடுகள் கூடுதலாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாநகர எல்லைக்குள் செயல்படும் அனைத்து மால்கள், ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட் ஆகியவை மாலை 6 மணிவரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும் வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்பட அனுமதியில்லை. இந்த கட்டுப்பாடுகளில் டாஸ்மாக் கடைகள் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகிறது. இந்நிலையில் சேலம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘சேலம் மாநகரத்திற்குட்பட்ட மதுபான சில்லரை விற்பனை கடைகள் 9ம் தேதி (நேற்று) முதல் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வகையில் சேலம் மாநகராட்சி பகுதிகளில் 65 கடைகள் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும்,’’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Tasmag ,Salem , Tasmag stores only in Salem metropolitan areas until 6 p.m.
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...