×

திருப்பதி ஏழுமலையானுக்கு நாட்டு மாடு பாலில் நைவேத்திய பிரசாதம்

திருமலை:  திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான சிறப்பு அதிகார குழு கூட்டம் தலைவர் ஜவகர்  தலைமையில் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் ஜவகர் அளித்த பேட்டியில் கூறியதாவது:  திருமலை,  திருப்பதி மற்றும் பலமனேர் ஆகிய இடங்களில் பசுக்கள் பராமரிப்புக்காக மூன்று கோசாலைகள் அமைக்கப்படும். ஏழுமலையான் நைவேத்திய பிரசாதத்திற்காக நாட்டு மாடுகளின் பசும்பால் மட்டுமே பயன்படுத்தப்படும். 25 நாட்டு மாடுகள் பக்தர்கள் நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

அவை விரைவில் திருமலைக்கு கொண்டு வரப்படும். சுவாமி  பிரசாதத்திற்கு 30 கிலோ நெய் தேவை. இதற்கு 250 முதல் 300 மாடுகள் தேவை. ஏழுமலைகளை பிரதிபலிக்கும் வகையில் ஏழு வகையான தேசிய வகை நாட்டு மாடுகள் இதற்காக பயன்படுத்தப்பட உள்ளது. இந்த மாட்டின் மூலம் வரும் பாலில் நெய் தயாரித்து பயன்படுத்தப்படும்.சுவாமிக்கு தீபாராதனைக்கு பயன்படுத்த நாட்டு மாடு நெய்யை பக்தர்கள் தானமாக  வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.‘தமிழ்நாட்டில் 15 வகையான பஞ்சகவ்ய பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை நான்கு மாதங்களில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு கொண்டு வரப்படும்,’ என்றும் ஜவகர் கூறினார்.



Tags : Naivediya ,Tirupati Ezhumalayan , offering
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்க...