×

டெல்லி சிறுமி குறித்த ராகுலின் பதிவு நீக்கம்: டிவிட்டர் நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லியில் கன்டோன்மெண்ட் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த வாரம் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாகியது. இது தொடர்பாக பூசாரி ராதே ஷ்யாம் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பி.யுமான ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால், சிறுமியின் பெற்றோரை தனது காருக்கு வரவழைத்து அவர் ஆறுதல் கூறினார். பிறகு, சிறுமியின் பெற்றோருடன் பேசும் புகைப்படங்களை அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். போக்சோ சட்டப்படி பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவரது குடும்பத்தினர் புகைப்படங்களை ஊடகங்கள் அல்லது சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது என்பதால் ராகுலின் டிவிட்டர் பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அப்பதிவை நீக்கும்படி டிவிட்டர் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய ராகுலின் பதிவை டிவிட்டர் நிர்வாகம் நேற்று நீக்கியது. டிவிட்டர் கணக்கு நிறுத்தம்: காங்கிரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்ட பதிவில், ‘ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உரிய நடைமுறைக்குப் பிறகு அது மீண்டும் செயல்படும். அதுவரையில் அவர் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலமாக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பார்,’ என கூறப்பட்டுள்ளது.



Tags : Rahul ,Delhi ,Twitter , About the Delhi girl Rahul's de-registration: Twitter action
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...