×

எல்லை பிரச்னையை தீர்க்க கூட்டுக் குழு: அசாம் - மேகாலயா முடிவு

கவுகாத்தி: அசாம் - மிசோரம் மாநிலங்களுக்கு இடையே சமீபத்தில் எல்லை பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட மோதலில், அசாமை சேர்ந்த 6 போலீசார் சுட்டு கொல்லப்பட்டனர். இப்பிரச்னைக்கு சுமூக தீர்வு காண, இருதரப்பும் நடத்திய பேச்சுவார்த்தையில் நேற்று முன்தினம் முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், மேகாலயா அரசும் அசாமுடன் உள்ள எல்லை பிரச்னையை தீர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளது.

அசாம் - மேகாலயா இடையே எல்லையில் 12 இடங்களில் மோதல் இருந்து வருகிறது. இவற்றில் முதற்கட்டமாக 6 இடங்களின் உரிமை தொடர்பாக முடிவு எடுக்க கூட்டுக் குழு அமைக்கப்படுவதாக , அசாம் முதல்வர் ஹிமாந்த் பிஸ்வா சர்மாவும், மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவும் நேற்று கூட்டாக அறிவித்தனர். இந்த இருமாநில கூட்டுக்குழுவில் தலா 5 பேர் உறுப்பினர்கள் பங்கு வகிப்பார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களை 30 நாட்களில் ஆய்வு செய்து பரிந்துரை அளிக்க உள்ளனர்.

Tags : Joint Committee ,Assam ,Meghalaya , Border issue, Assam, Meghalaya
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...