தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா மீது தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு..!

தஞ்சை:தஞ்சாவூரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து பாஜக சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன் நேற்று தடை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்பி சி.பி.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில், தஞ்சை மேற்கு காவல் நிலையம், கிழக்கு காவல் நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போராட்டத்தின் போது அனுமதியின்றி மாட்டுவண்டி ஒட்டி சென்றது, கொரோனா விதிகளை மீறி கூட்டம் கூடியது உள்ளிட்ட  புகாரின் பேரின் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும், கருப்பு முருகானந்தம், ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 700 மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>