×

சொகுசு காருக்கு 50% வரியான ரூ.30.3 லட்சத்தை கட்ட நடிகர் தனுஷுக்கு 48 மணி நேரம் அவகாசம் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: சொகுசு காருக்கு மீதமுள்ள 50% வரியான ரூ.30.3 லட்சத்தை கட்ட நடிகர் தனுஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 48 மணி நேரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது. மனுதாரர்கள் வழக்கு தாக்கல் செய்யும்போது குறிப்பிட வேண்டிய தகவல்கள் இல்லையெனில் மனுவை பதிவாளர் ஏற்கக்கூடாது. மேலும், விதிகளை பின்பற்றாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்த தனுஷ், அந்த காருக்கான நுழைவு வரியான 60 லட்சம் ரூபாயை செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய 2015ஆம் ஆண்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரி பாக்கியை திங்கள் கிழமைக்குள் செலுத்தி விடுவதாகவும், வழக்கை வாபஸ் பெற  அனுமதிக்க வேண்டும் என நடிகர் தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதும், வரி பாக்கியை செலுத்தி, வழக்கை வாபஸ் பெற்றிருக்க வேண்டும் எனவும், அதை விடுத்து தற்போது வழக்கை வாபஸ் பெற கோருவதை ஏற்க முடியாது என மறுப்பு தெரிவித்த நீதிபதி, தனுஷ் செலுத்த வேண்டிய வரி பாக்கியை கணக்கிட்டு இன்று பிற்பகல் 2:15 மணிக்கு தெரிவிக்கும்படி, வணிக வரித்துறைக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சொகுசு காருக்கு மீதமுள்ள 50% வரியான ரூ.30.3 லட்சத்தை கட்ட நடிகர் தனுஷுக்கு 48 மணி நேரம் அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Supreme Court ,Sagittarius , Luxury car, actor Dhanush, High Court, order
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...