ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 54 பேர் மீது குண்டாஸ்: எஸ்பி தகவல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 54 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது என எஸ்பி கார்த்திக் தெரிவித்தார். ராமநாதபுரம் கேணிக்கரையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் வின்சென்ட் ராஜா (27). கஞ்சா விற்பனை தொடர்பாக இவர் மீது ராமநாதபுரம் நகர் போலீசில் வழக்கு உள்ளது. கீழக்கரை ஜின்னா தெருவைச் சேர்ந்த நல்ல இபுராஹிம் மகன் சாகுல் ஹமீது. இவர் பரமக்குடியில் கஞ்சா விற்பனை தொடர்பாக, பரமக்குடி நகர் போலீசில் வழக்கு நிலுவையில் உள்ளது. இருவரையும் ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக் பரிந்துரையில், கலெக்டர் சந்திரகலா உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

ராமநாதபுரம் கலெக்டராக சந்திரகலா பொறுப்பு ஏற்ற பின், குற்ற வழக்குகளில் தொடர்புடைய 2 பேர், சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்திய 7 பேர், போதைப்பொருட்கள் குற்றவாளிகள் 4 பேர், சிறாரிடம் பாலியல் சீண்டாலில் ஈடுபட்ட 4 பேர் என 17 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 54 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என எஸ்பி கார்த்திக் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>