×

தமிழகம் முழுவதும் மீண்டும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு!: ஆர்வம் காட்டும் மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம்..!!

கோவை: கோவையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமுடன் வரும் மக்கள் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் கோவை ஊரக பகுதிகளில் 26 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் தட்டுப்பாடு காரணமாக அனைத்து மையங்களிலும் தினமும் தலா 250 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆர்வமுடன் வரும் மக்கள் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது.

காலை முதலே காத்திருந்தும் தங்களுக்கு டோக்கன் கிடைக்கவில்லை என்று கூறும் பொதுமக்கள், ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தும் ஒன்றிய அரசு போதிய தடுப்பூசிகளை ஒதுக்குவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் கோவை மாவட்டத்தில் தடுப்பூசி போடும் மையத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 


Tags : Tamil Nadu , Tamil Nadu, vaccination, shortage, people disappointed
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...