மீஞ்சூர் அருகே பரபரப்பு: பிளஸ் 2 மாணவி மாயம்

பொன்னேரி: மீஞ்சூர் அருகே தோழியை பார்த்துவிட்டு வருவதாக சென்ற பிளஸ்2 மாணவி  மாயமானது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்தை மஞ்சி ரெட்டியர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன்.  விவசாயியான  இவரது மகள் அபர்ணா (16) அங்குள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.  

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தோழியைப் பார்த்து வருவதாக கூறிச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காட்டூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை யாராவது கடத்திச் சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More