ஜம்மு காஷ்மீர் மாநிலம் முனாந் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை: தேடுதல் வேட்டை தீவிரம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாவட்டம் குல்காம் மாவட்டத்தில் உள்ள முனாந் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் இன்னும் கண்டறியவில்லை என பாதுகாப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். குல்காம் மாவட்டத்தில் உள்ள முனாந் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் அந்த இடத்தை சுற்றி பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளனர். எனவே அவர்கள் பதிலடி கொடுக்கும் விதமாக பய்கரவாதிகளை நோக்கி பாதுகாப்பு படையினரும் சுட்டனர். 

இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளான். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது. அப்பகுதியில் வேறு யாரேனும் பதுங்கியுள்ளார்களா? என பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு உள்ள மக்களை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தல் செய்துள்ளனர்.  குல்காம் மாவட்டம் முனாந் பகுதி முழுவதையும் பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

Related Stories:

>