சிறுமியிடம் சில்மிஷம் கூலி தொழிலாளி போக்சோவில் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் - புட்லூர் சாலையில் வசிப்பவர் முருகன் (56). கட்டிட தொழிலாளி. கடந்த 2 நாட்களுக்கு முன் முருகன் வீட்டில் இருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற 12 வயது சிறுமியிடம், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் கூறினாள்.  இதுகுறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து பட்டாபிராம் பகுதியில் பதுங்கி இருந்த முருகனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More
>