×

ரிச்சி தெரு அருகில் உள்ள 5 மாடிக் கட்டடத்தில் திடீர் தீவிபத்து.. ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம்

சென்னை : சென்னை அண்ணா சாலையில் உள்ள கணினி விற்பனையகத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. சென்னை அண்ணா சாலையில் உள்ள 5 மாடி கட்டிடத்தில் 3வது மாடியில் கணினி விற்பனையகம் ஒன்று இயங்கி வருகிறது.இன்று காலை இந்த கடையின் ஜன்னல் வழியாக புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் 6 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைக்கும் பணியை மேற்கொண்டனர்.

முன்னதாக கட்டிடத்தின் 2வது மற்றும் 4வது மாடியில் சிக்கி இருந்த 40 பேரை ராட்சத கிரேன் மூலமாக பத்திரமாக தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர். பின்னர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். கணினி விற்பனையகத்தில் ஏற்பட்ட மின் கசிவு தான் தீ விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் அண்ணா சாலை முழுவதுமாக கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. தீயணைப்பு துறையின் 6 வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸுகள் வந்ததால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பல் ஆகி உள்ளன.இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Richie Street , அண்ணா சாலை
× RELATED சென்னை ரிச்சி தெருவில் 90 கடைகளுக்கு...