×

சொத்துக்கள் முறையாக வாங்கியுள்ளாரா என்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. விசாரணை

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ராமசந்திரன் விசாரணை நடத்தி வருகின்றனர். பதவியில் இருந்த காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் மற்றும் டெண்டர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சொத்துக்கள் முறையாக வாங்கியுள்ளாரா என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தவதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் சாயப்பட்டறை உள்ளிட்ட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள எம்.ஆா்.விஜயபாஸ்கர் வீடு, காரிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மொத்தமாக எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 21 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 


விஜயபாஸ்கரின் உதவியாளர்கள், ஆதரவாளரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அப்போது, போக்குவரத்துத் துறையில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடைபெற்றதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக இன்று காலை முதல் அவருக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.  



Tags : Assets, purchased, to MR Vijayabaskar, DSP, Inquiry
× RELATED கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர்...