×

மயிலாடுதுறை பகுதியில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்-கொரோனாவில் இருந்து நலம்பெற பிரார்த்தனை

மயிலாடுதுறை : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே அரங்கக்குடி பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி தொழுகை நடத்தினர்.மமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அரங்கக்குடியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் சிறப்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கொண்டு வாழ்வில் வளமோடு ஒற்றுமை உணர்வோடு சிறப்புற்று வாழவும், கொரோனா பெருந் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபடவும் தொழுகை நடத்தினர்.

தொழுகை முடிந்த பின் சிறுவர் முதல் பெரியோர் வரை வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் கூறைநாடு பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல், நீடூர் தேரிழந்தூர், சீனனாசபுரம்உள்ளிட்ட பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.சீர்காழி: சீர்காழி காமராஜர் வீதி தாடாளன் கோயில், வடகால், கோயில்பத்து, சேந்தங்குடி, புங்கனூர், மணிகிராமம், திருமுல்லைவாசல், பெருந்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். பின்பு இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கு குர்பாணி கொடுத்து உதவிகள் செய்தனர்.தரங்கம்பாடி: தரங்கம்பாடி, பொறையார், திருக்களாச்சேர், ஆயப்பாடி, சங்கரன்பந்தல், சேமங்கலம், ஆக்கூர், திருச்சம்பள்ளி உள்ளிட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Tags : Festive Celebration ,Buckwheat ,Peyladu , Mayiladuthurai: Corona virus during special prayers at Arangakudi mosque near Mayiladuthurai on the eve of Bakreed festival
× RELATED ஓணம், பக்ரீத் தளர்வுகளால் கேரளாவில்...