×

ஆரோக்ய ரக்‌ஷக் மருத்துவ காப்பீடு: எல்ஐசி அறிமுகம்

மும்பை: எல்ஐசி நிறுவனம் ஆரோக்ய ரக்‌ஷக் என்ற, மருத்துவ காப்பீட்டை பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. கடந்த 19ம் தேதி முதல் இந்த புதிய காப்பீட்டு திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தனி நபர்கள், தங்கள் பெயரிலும், தங்களின் மனைவி, குழந்தைகள் பெற்றோர் பெயரிலும் 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பாலிசி எடுக்கலாம். குழந்தைகளாக இருந்தால் 91 நாட்களில் இருந்து 20 வயதுக்கு உட்பட்டவர்களை திட்டத்தில் சேர்க்கலாம். பாலிசி காலத்தை பொறுத்தவரை, குழந்ைதகளுக்கு 25 வயது வரையிலும், பெற்றோர், மனைவிக்கு 80 வயது வரையிலும் அனுமதிக்கப்படுகிறது.

பிற காப்பீடுகளை போல் அல்லாமல், நோய்களுக்கு நிலையான காப்பீட்டு பலன்களை இது வழங்குகிறது. தேர்ந்தெடுக்க வசதியான விருப்ப தேர்வுகள், விருப்பத்துக்கு ஏற்ப பிரீமியம் செலுத்தும் வசதி, மருத்துவமனையில் உள்ளிருப்பு சிகிச்சை, அறுவை சிகிச்சைக்கு சிறந்த நிதி பாதுகாப்பு, மருத்துவ செலவு எதுவானாலும் ரொக்கத்தொகை பலன், முதன்மை பாலிசிதாரர் இறந்தால் மற்றவர்களுக்கு பிரீமியம் செலுத்துவதில் இருந்து விலக்கு, ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவ பரிசோதனை உட்பட பல்வேறு பலன்கள் இந்த திட்டத்தில் உள்ளது என எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Tags : Aurakya Rakshak , Introduction to Health Care Medical Insurance, LIC
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...