×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பூசாரிகளுக்கு மாதம் ₹5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்-பேரமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பூசாரிகளுக்கு மாதந்தோறும் ₹5ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும், என்று பூசாரிகள் பேரமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் பூசாரிகளின் நிலை அறிந்து ஒருகால பூஜை திட்டத்தில் பயன்பெறும் பூஜாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கிய முதல்வருக்கு நன்றி. கிராமம் மற்றும் நகர் பகுதிகளில் பூஜை செய்து வரும் அரசின் ஒருகால பூஜை திட்டத்தில் பயன் அடையாத பூசாரிகள் பல ஆயிரக்கணக்கானோர் தற்போது உள்ள அரசாணையின்படி கொரோனா நிவாரண நிதி பெற முடியவில்லை.

திருக்கோயில்களில் பரம்பரை மற்றும் ஆன்மிக ஈடுபாட்டுடன் பூஜை சேவை பணியாற்றி வரும் பூசாரிகளுக்கு மாதம் ₹5ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கோயில்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற பூசாரிகளுக்கான ஓய்வூதியம் பெறும் திட்டத்தை எளிமைபடுத்த வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூசாரி இறந்துவிட்டால் அவரது மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களுக்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட பூசாரிகள் நல வாரியத்தை நடைமுறைபடுத்த வேண்டும்.

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு தீபம் ஏற்ற எண்ணெய் மற்றும் நெய்வேத்தியத்திற்கு அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்க வேண்டும். சொந்த வீடு இல்லாத பூசாரிகளுக்கு அரசின் திட்டத்தில் வீடு வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். பெரிய கோயில்களில் தானமாக வழங்கப்படும் பசுக்களை சிறிய கோயில்களுக்கு கோபூஜை மற்றும் பால் அபிஷேகத்திற்கு பயன்பட வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.


Tags : Ranipettai district ,Collector's Office , Ranipettai: Priests in Ranipettai district should be given an incentive of ₹ 5,000 per month, said the priests on behalf of the bargain.
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில்...