திருப்பதி ஏழுமலையானுக்கு 6.5 கிலோ தங்க கத்தி: ஐதராபாத் பக்தர் வழங்கினார்

திருமலை: தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் எம்.எஸ்.பிரசாத், தொழிலதிபர். இவர் கோவையை சேர்ந்த தங்க வடிவமைப்பு நிபுணர்களைக் கொண்டு திருப்பதி ஏழுமலையானுக்கு வழங்க தங்க கத்தி (சூரிய கடாரி) தயார் செய்துள்ளார். இந்த கத்தி சுமார் 6.5 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை தயாரிக்க 6 மாதங்கள் ஆகியுள்ளது.  இந்நிலையில், திருமலையில் எம்.எஸ்.பிரசாத் குடும்பத்தினர் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, தங்க கத்தியை கூடுதல் செயல்  அதிகாரி தர்மாவிடம்  வழங்கினர்.

தொடர்ந்து, தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் எம்.எஸ்.பிரசாத் குடும்பத்தினருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர்.  சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியீடு: இதற்கிடையே, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்தில் தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று வௌியிடப்படுகிறது. இதனை காலை 9 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in/index.html என்ற இணையத்தில் சென்று பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Related Stories:

>