×

கே.ஆர்.எஸ், கபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு

சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16 ஆயிரத்து 301 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.29 அடியாக இருந்தது. கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வரும் உபரிநீரின் அளவு சரிந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் உபரிநீரின் அளவு குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 18,000 கனஅடியாக இருந்த நீரின் வரத்து இன்று 16,000 கனஅடியாக சரிந்துள்ளது.

இதனால் ஒகேனக்கல்லில் பிரதான அருவி, ஐந்தருவி மற்றும் சிற்றருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை ஒன்றிய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags : KRS ,Kabini Dam , mettur dam
× RELATED கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு...