×

வேலை இழந்து 2 மாதமாகி விட்டதா? பிஎப் ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பணம் எடுக்கலாம்

புதுடெல்லி: கொரோனா அசு்சுறுத்தல் பல கோடி மக்களின் வேலை வாய்ப்பை பறித்து தவிக்க விட்டுள்ளது. தொழிற்சாலைகள் முடங்கி விட்டன. சிறு குறு வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.  தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் வேலையை இழந்து, அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கே சிரமப்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்டவர்கள் புதிய இடங்களில் வேலை தேடி அலைந்து கொண்டிருப்பார்கள். இதுபோன்ற ஊழியர்களின் எதிர்கால நன்மைக்காக கொண்டு வரப்பட்டதுதான், ‘ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம்-95.’ ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைவருக்கும் இந்த ஓய்வூதிய திட்டம் பொருந்தும்.

58 வயதில் ஓய்வு பெற்ற பிறகு, இந்த ஓய்வூதிய திட்டத்தில் இருந்து ஊழியருக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும். குறைந்தப்பட்சம் 10 ஆண்டுகள்  பணியாற்றிய அனைவரும் இந்த ஓய்வூதியத்தை பெற முடியும். ஆனால், கொரோனா ஊரடங்கால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பத்து ஆண்டுகள் கூட பணியில் தொடர முடியாமல் பல கோடி ஊழியர்கள் வேலையை இழுந்துள்ளனர். அவர்கள் பிஎப் தொகை எடுத்து சிறிது காலம் வாழ்க்கையை ஓட்டி, கையிருப்பு  காலியாக இப்போது தவித்து கொண்டிருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் இந்த ஓய்வூதிய திட்டத்தில் உள்ள பணத்தையும் எடுக்க முடியும்.

* பணியில் சேர்ந்து ஆறு மாதங்களுக்கு மேல் பணியாற்றியவர்கள் அல்லது 10 ஆண்டுகளுக்குள் வேலையை இழந்தவர்கள் இதற்கு தகுதியானவர்கள்.
* வேலையை இழந்து குறைந்தப்பட்சம் 2 மாதங்கள் முடிந்திருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்கள் ஊழியர்கள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ள பணத்தை எடுக்க விரும்பினால், அதற்கான விண்ணப்பித்து பெறலாம் என வருங்கால வைப்பு நிதி திட்ட விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

Tags : BP , Job, Bf, pension plan, money
× RELATED நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்;...