×

கேரளாவில் வரதட்சணை மறுப்பு திருமணம்: நகைகளை கழற்றி பெண் வீட்டாரிடம் ஒப்படைத்த வாலிபர்

திருவனந்தபுரம்: கேரளாவில் நாதஸ்வர கலைஞர் தனக்கு வரதட்சணை வேண்டாம் என கூறி மண மேடையிலேயே மனைவியின் நகைகளை கழற்றி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் நடந்துள்ளது. கேரளாவில் சமீப காலமாக வரதட்சணை கொடுமை வழக்குகள் அதிகரித்து வருகின்றன. வரதட்சணை கொடுமை சாவுகள் அதிகரித்து வருவதை கண்டித்து கவர்னர் ஆரிப் முகம்மது கான் உண்ணாவிரதம் இருந்தார். இந்நிலையில் ஆலப்புழா அருகே உள்ள நூரநாடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (28). நாதஸ்வர கலைஞர். அவருக்கும் ஆலப்புழா பனையில் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகள் சுருதிக்கும் (21) திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

பெண் பார்க்கும்போது வரதட்சணையாக நகை எதுவும் வேண்டாம் என்று கூறியிருந்தார். கடந்த மே மாதம் 13ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக தேதி மாற்றி வைக்கப்பட்டு நேற்று (15ம் தேதி) அங்குள்ள கோயிலில் திருமணம் நடத்தப்பட்டது. நகைகள் வேண்டாம் என்று சதீஷ் கூறியபோதிலும் சுருதிக்கு அவரது பெற்றோர் 50 பவுன் நகைகள் கொடுத்திருந்தனர். அந்த நகைகளை அணிந்து கொண்டு மணமேடைக்கு வந்தார். மணமேடையில் வைத்து சுருதியுடன் பேசிய சதீஷ் தனக்கு நகைகள் எதுவும் வேண்டாம். உனக்கு வேண்டுமானால் தாலியும், இரு கைகளிலும் ஒவ்வொரு வளையலும் வைத்துக்கொள்.

மீதமுள்ள நகைகளை பெற்றோரிடம் கொடுத்துவிடு என்று கூறினார். இதற்கு சுருதி சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து கோயில் நிர்வாகிகள் முன்னிலையில் நகைகளை சுருதியின் பெற்ேறாரிடம் ஒப்படைத்தனர். சதீசின் இந்த செயலை அனைவரும் பாராட்டினர்.

Tags : Kerala , Dowry denial marriage in Kerala: A young man removes jewelery and hands it over to a woman's house
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...