விமான நிலையத்தை போன்ற வசதிகளுடன் குஜராத் காந்திநகரில் நவீன ரயில் நிலையம்: நாளை பிரதமர் மோடி திறக்கிறார்

புதுடெல்லி:  ரயில் நிலையங்களை உலகத்தரம் வாய்ந்தவையாகவும், வணிக மையங்களாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 2016ம் ஆண்டு குஜராத் காந்திர நகர் ரயில்நிலையத்தை புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு காந்திநகர் ரயில்வே மற்றும் நகர்ப்புற மேம்பாடு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு ரயில் நிலையத்தை  மறுசீரமைத்து மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த ரயில் நிலையம்  விமான நிலையத்துக்குள் சென்று வந்த உணர்வை உருவாக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் பிரார்த்தனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலைய கட்டமைப்புக்கள் பசுமை கட்டிட மதிப்பீடு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நவீன மற்றும் சிறப்பு அம்சங்களை கொண்ட குஜராத் காந்தி நகர் ரயில் நிலையம் நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட முதல் ரயில்நிலையமாகும். இதனை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.

Related Stories:

>