×

கேரளாவில் பெண்களுக்கு எதிராக தொடரும் வரதட்சணை கொடுமை.: உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டார் ஆளுநர் ஆரிப் முகமது கான்

திருவனந்தபுரம்: வரதட்சணை கொடுமைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரததத்தில் ஈடுபட்டுள்ளார். கேரள மாநிலத்தில் சமீப காலமாக வரதட்சணை கொடுமையால்   ஏராளமான பெண்கள் உயிரிழந்து வருகின்றனர். வரதட்சணை கொடுமை கேரள மாநிலத்தில் தற்போது அதிக அளவில் நடைபெறுவதால் அதற்க்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர்.

பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் நிலையில், பெண்கள் மீதான வன்கொடுமைக்கு எதிராக காந்திய அமைப்பு சார்பில் கேரளா மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த காந்திய அமைப்பு சார்பில் நடைபெறும் உண்ணாவிரதக போராட்டத்தில் பலரும் கலந்துக்கொண்டு தங்களுது ஆதரவு மற்றும் எதிர்ப்பை தெரிவித்து வருகினறனர்.

இந்த நிலையில், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தனது உண்ணாவிரத போராட்டத்தை காந்திய அமைப்பினருடன் சேர்ந்து ஆளுநர் மாளிகையில் தொடங்கி உள்ளார். ஆளுநர் மாளிகையிலேயே காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் இருக்கிறார் ஆரிப் முகமது கான். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில், பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர்.

Tags : Dowry ,Kerala ,Governor ,Arif Mohammad Khan , Dowry atrocities continue against women in Kerala: Governor Arif Mohammad Khan joins hunger strike
× RELATED வரதட்சணையின்றி திருமணம் அமையும் சண்டாள யோகம்