×

நீட் - ஆய்வுக்குழு செல்லும்.. வழக்கு மூலம் உங்களுக்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது : பாஜகவின் கரு. நாகராஜனுக்கு குட்டு வைத்த நீதிபதிகள்!!

சென்னை : நீட் ஆய்வுக்குழு அமைத்தது செல்லும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணைக்கு தடை விதிக்கக்கோரியும், அதை ரத்து செய்யக்கோரியும் பாஜகவைச் சேர்ந்த கரு.நாகராஜன் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, நீட் தாக்கம் பற்றி அறிய தமிழக அரசு குழு அமைத்திருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது அல்ல.பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே இந்த குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க முடியும். இது விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு.நீட் பாதிப்பு தொடர்பாக கருத்து கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள்( கரு.நாகராஜன்) யார்?நீட் தேர்வு தொடர்பாக மக்கள் கருத்தை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க மாநில அரசு கமிட்டி அமைத்திருக்கலாம்.

அரசு பொதுமக்களின் கருத்துக்களை கேட்கிறது. அதில் தலையிட வேண்டும் என்ற கேள்வி எங்கு எழுகிறது.இந்த வழக்கு தொடுத்ததன் மூலம் உங்களுக்கு (கரு.நாகராஜன்)  நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது.நீட் பாதிப்பு தொடர்பாக ஆய்வுக்குழு அமைக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.குழு நியமனம் என்பது வீண் செலவு எனக்கூற முடியாது.மக்கள் கருத்து கேட்பது தொடர்பான கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை தடுக்கும் வகையில் மாநில அரசு தனது அதிகார வரம்பை மீறவில்லை. கரு. நாகராஜனின் மனுவை தள்ளுபடி செய்கிறோம்,என்று தெரிவித்தனர்.


Tags : BJP ,Nagarajan , நீட் ஆய்வுக்குழு
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...