×

சத்தியமங்கலம் அருகே ஜாலியாக தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற யானை கூட்டம்

சத்தியமங்கலம் :  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் பகல் நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறி தேசிய நெடுஞ்சாலை ஓரம் சுற்றித்திரிவதோடு அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை ஆசனூர் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் குட்டிகளுடன் நின்றிருந்த காட்டு யானை கூட்டமாக மழையில் நனைந்தபடி மெதுவாக சாலையை கடந்து சென்றன.

சாரல் மழையில் காட்டு யானைகள் கூட்டமாக சாலையை கடந்து சென்றபோது அவ்வழியே காரில் சென்ற வனவிலங்கு ஆர்வலரான மருத்துவர் ராம் சுரேந்தர் என்பவர் தனது கேமராவில் காட்டு யானைகள் சாலையை கடந்த காட்சியை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தார். யானைகள் சாலையை கடந்து சென்றதால் அவ்வழியே சென்ற வாகனங்கள் சாலையில் சிறிது நேரம் நின்று யானைகளை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தபின் புறப்பட்டுச் சென்றன.

காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக பகல் நேரங்களில் சாலையை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். யானைகள் பகல் நேரங்களில் சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகள் மித வேகத்தில் வாகனங்களை இயக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags : National Highway ,Satyamangalam , Satyamangalam: The Satyamangalam Tiger Reserve is home to a wide variety of wildlife including elephant, tiger and leopard. This forest
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!