கொள்ளிடம் அருகே குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு-அதிகாரிகள் துரித நடவடிக்கை

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கொள்ளிடத்தில் உள்ள பல கிராமங்களுக்கு குடிநீர் அளிக்கப்பட்டு வருகிறது. வடரங்கம் நீரேற்று நிலையத்திலிருந்து கொள்ளிடம் பகுதிக்கு வந்து கொண்டிருக்கும் பிரதான குடிநீர் குழாய் கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் நேற்று 6 அடி நிலத்துக்கு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிக அளவில் வெளியேறிக் கொண்டிருந்தது. இதனால் தைக்கால், சையது நகர், கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு தண்ணீர் செல்வது தடைபட்டது.

இதுகுறித்து தகவலறிந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடியாக பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த 4 மீட்டர் குழாயை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக புதிய குழாய் பொருத்தி வழக்கம் போல் தொடர்ந்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தனர். அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் தடையின்றி பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related Stories:

More
>