×

கோவையில் கொரோனா தடுப்பூசிக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு

கோவை: கோவையில் கொட்டும் மழையிலும் கொரோனா தடுப்பூசிக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை என்பது மிகவும் தீவிரமாக இருந்தது. ஒருநாளைக்கு 5,000 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகும் அளவுக்கு தீவிரமாக இருந்தது. இந்நிலையில் படிப்படியாக கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வரும் சூழல் இருக்கிறது.

இதனிடையே கோவையில் நேற்று ஒரேநாளில் 291 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. தொடர்ச்சியாக 3ஆம் அலையின் எச்சரிக்கையும் சுகாதாரத்துறையின் சார்பில் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே 3ஆம் அலையின் அச்சம் காரணமாகவும் கோவையில் அதிக அளவில் கொரோனா தொற்று இருந்ததன் காரணமாகவும் மக்கள் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளில் ஆர்வமாக உள்ளனர். தடுப்பூசி கையிருப்பு தொடர்ச்சியாக குறைவாகவே இருந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தடுப்பூசி போடப்படவில்லை. தடுப்பூசி போடும் நாட்களில் தடுப்பூசி மையங்களில் தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருகிறது. ஒரு தடுப்பூசி மையத்திற்கு 100 முதல் 500 வரை தடுப்பூசி வரக்கூடிய சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கக்கூடிய சூழல் தான் இருந்து வருகிறது.

Tags : Coime , corona vaccine
× RELATED பூனை காணவில்லை; கண்டுபிடித்து...