ராஜஸ்தானின் அல்வர் மாவட்டத்தில் 15 நாளில் 24 பலாத்கார வழக்கு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் அல்வர் மாவட்டத்தில்a கடந்த 15 நாளில் 24 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வர் மாவட்டத்தில், கடந்த பதினைந்து நாட்களில் ஏழு கும்பல் பாலியல் பலாத்கார வழக்குகளும், 17 பலாத்கார வழக்குகளும் பதிவாகியுள்ளன. மொத்தமாக 24 வழக்குகள் பதிவாகி உள்ளன.

இம்மாவட்டத்தில் பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ பெண்கள் மத்தியில் பாலியல் புகார் அளித்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனால், அவர்கள் புகார் அளிக்க முன்வருகின்றனர். காவல்துறையினரும் உடனடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கும்பல் பாலியல் பலாத்கார வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமிகளைக் கடத்தி வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். கும்பல் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து வருகிறோம்’ என்றனர்.

Related Stories:

>