×

கன்னியாகுமரியில் இன்று கடல் சீற்றம்: முன்னோருக்கு பலி தர்பணம் செய்த பக்தர்கள்

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்ளூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கொரோனா 2வது அலையின் ஊரடங்கு காரணமாக, கடந்த 2 மாதங்களாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் 24 மணிநேரமும் பரபரப்புடன் காணப்படும் கன்னியாகுமரி திரிவேணி சங்கம கடற்கரை, படகு போக்குவரத்து தளம் ஆகிய இடங்களில் வெறிச்சோடின. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தொடர்ந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பொது போக்குவரத்து தொடங்கியபோதும், கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து அமலில் உள்ளது. அதேவேளை அதிகாலை வாங்கிங் செல்ல மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சிலர் குடும்பமாக கடற்கரை பகுதிக்கு சென்று வருவதை பார்க்க முடிகிறது. சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்வதை தடுக்கும் வகையில், பகவதி அம்மன் கோயில், காந்தி மண்டபம் அருகே போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து உள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுவாக இந்துக்களின் வீடுகளில் யாராவது இறந்தால், ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகள் அருகே அவர்களுக்காக பலி தர்ப்பணம் ெசய்வது வழக்கமான ஒன்று. கொரோனா ஊரடங்கால் வெளியிடங்களுக்கு சென்று முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கன்னியாகுமரியில் கூட்டம் களை கட்டியது. குடும்பத்துடன் வந்திருந்த பலர் முக்கடல் சங்கமத்தில் உள்ள 16 கால் மண்டபத்தில் முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செய்தனர். அப்போது கடலில் நீராடி முடித்து பிறகு பகவதி அம்மனை தரிசித்து சென்றனர்.

திடீர் கடல் சீற்றம்
இதற்கிடையே கன்னியாகுமரியில் கடந்த 2 நாட்களாக மழை, பலத்த சூறை காற்று வீசி வருகிறது. இன்று அதிகாலையும் சூறைக்காற்று நீடித்தது. இதனால் கன்னியாகுமரி கடல் இன்று காலை சீற்றத்துடன் காணப்படுகிறது.

Tags : Kanyakumari , Sea rage in Kanyakumari today: Devotees who sacrificed to their ancestors
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...