×

48 நாட்களுக்கு பிறகு கொங்கணாபுரம் சனி சந்தை இன்று கூடியது..!

இடைப்பாடி: கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் 24ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது, ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக சேலம் மாவட்டம், கொங்கணப்புரம் சனி சந்தை கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெறாமல் இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக , இன்று காலை கொங்கணபுரம் சனி சந்தை கூடியது. 48 நாட்களுக்கு பின் இன்று கூடிய சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வியாபாரிகள் ஆடு, கோழி வாங்க வந்திருந்தனர். இருந்த போதிலும் வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு தகவல் தெரியததால், கூட்டம் குறைவாகவே இருந்தது.

இன்று நடந்த சந்தைக்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 2500 ஆடுகள், 250 கோழிகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.  இதில், 15 கிலோ எடை கொண்ட ஆடு 10 ஆயிரத்திற்கும், சேவல்கள் 500 முதல் 700 வரை விற்பனையானது. மேலும், 20 டன் காய்கறிகள் 5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் வழக்கமாக கோடிக்கும் மேல் வர்த்தகம் நடக்கும். ஆனால் கொரோனா ஊரடங்கால் விற்பனை மந்தமாக இருந்ததால் இன்று 80 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Tags : Konganapuram Saturn Market , After 48 days, the Konganapuram Saturn Market convened today
× RELATED கொங்கணாபுரம் சனி சந்தையில் 4 ஆயிரம்...