×

கலைஞர் அறக்கட்டளை மருத்துவம், கல்வி உதவி நிதி ரூ.2 லட்சம்

சென்னை: திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடி வங்கியில் வைப்புநிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2021 ஜூன் மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை நேற்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக இதுவரை ரூ.5 கோடியே 31 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 2012 ஜூன் மாதம் முதல் உதவித் தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும் 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தியும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று ரூ.2 லட்சத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Artist Foundation, Medical, Educational Assistance
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...