இந்திய திரையுலக வரலாற்றில் பாலிவுட் நடிகர் திலிப்குமார் என்றென்றும் நிறைந்திருப்பார்!: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்..!!

டெல்லி: பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலிப்குமார் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரை நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்:

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், பல்வேறு தரப்பினரால் விரும்பப்பட்டவர் நடிகர் திலிப்குமார் என்று கூறியுள்ளார். இந்திய திரையுலக வரலாற்றில் திலிப்குமார் நிறைந்திருப்பார் என்று கூறியுள்ள அவர், திலிப்குமார் பிரிவால் வாடும் குடும்பத்தினர், ரசிகர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி:

திலிப்குமார் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். திறமையான நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் திலிப்குமார் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி:

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், இந்திய சினிமாவுக்கு திலிப்குமார் மிகச்சிறப்பான பங்களிப்பை எப்போதும் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதேபோல ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி ராணி, நடிகர்கள் அக்ஷய் குமார், மதூர் பண்டார்கர், மனோஜ்பாய் உள்ளிட்டோரும் மறைந்த நடிகர் திலிப்குமாருக்கு இரங்கல் தெரிவித்து அவரது நினைவை போற்றி உள்ளனர்.

Related Stories:

>