×

ஜூனில் மட்டும் ஜிஎஸ்டி ரூ.92,849 கோடி வசூல்: 8 மாதத்திற்கு பின் குறைவு

புதுடெல்லி: ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் ரூ.92,849 கோடியாகும். இது, கடந்தாண்டு ஜூன் மாத வருவாயை விட 2% அதிகமாகும். கடந்தாண்டு ஜூன் மாத வசூல் ரூ.90,917 கோடி. மொத்த வருவாய் ரூ.92,849 கோடியில் ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.16,424 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.20,397 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.49,079 கோடி, செஸ் ரூ.6,949 கோடி (இறக்குமதி பொருட்களின் வரி ரூ.809 கோடி சேர்த்து) ஆகும். ஜிஎஸ்டி வருவாய் கடந்த 8 மாதங்களாக தொடர்ச்சியாக ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருந்தது. மே மாதம் அதிகபட்சமாக ரூ.1.02 லட்சம் கோடி வசூலானது. ஆனால், ஜூன் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி ஒரு லட்சம் கோடிக்கும் கீழ் சரிந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : GST, collection, reduction
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...