மாதவரம் அருகே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

புழல்: சென்னை மாதவரம் ரவுண்டானா சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை பகுதிகளான ரெட்டேரி, புழல் மத்திய சிறை, காவாங்கரை,  தண்டல் கழனி, சாமியார் மடம்,  செங்குன்றம் பை- பாஸ், திருவள்ளூர் கூட்டு சாலை,  பாடியநல்லூர் எம்ஏநகர் மற்றும் திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை ஆலமரம் பகுதி.  இந்திராநகர். பம்மதுகுளம், காந்திநகர், அம்பேத்கர் நகர், பெருமாள் அடிபாதம்,  எடப்பாளையம், அலமாதி வரை செல்லும் முக்கியமான தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில்மாடுகள் எந்நேரமும் சுற்றி வருவதால் வாகன ஓட்டிகள், குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.

சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் மற்றும் அந்தந்த ஊராட்சி, மாநகராட்சி,  பேரூராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து மாடுகளை சிறைபிடித்து மாட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்குமாறு பாதிக்கப்பட்டுவரும் வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

More
>