×

நாடாளுமன்ற அவைகள்,சட்டப்பேரவைகளில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் பலர் நல்லொழுக்கத்தை பின்பற்றுவதில்லை : உச்சநீதிமன்றம் கவலை

டெல்லி நாடாளுமன்ற அவைகள் மற்றும் சட்டப்பேரவைகளில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் பலர் நல்லொழுக்கத்தை பின்பற்றவில்லை என்று உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதிகளின் இது போன்ற செயல்பாடுகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் சந்திர சூட் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு கூறியுள்ளனர். கடந்த 2015ம் தேதி கேரள சட்டப்பேரவையில் நிதி மசோதா தாக்கலின் போது, அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் பலர் வன்முறையில் ஈடுபட்டனர்.

அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போதைய எம்எல்ஏக்கள் மீதான வழக்கை திரும்பப் பெற அனுமதி தேவை என்பது கேரள அரசின் கோரிக்கையாகும். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மக்கள் சபைகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மக்கள் பிரதிநிதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.இந்த வழக்கு விசாரணை ஜூலை 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : Parliament ,Supreme Court , உச்சநீதிமன்றம்
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...