×

இந்த வாரத்தில் மத்திய அமைச்சரவையில் மாற்றம்? பிரதமர் தலைமையில் இன்று நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் ரத்து

டெல்லி: மத்திய அமைச்சரவை விரிவாக்க சலசலப்புக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி உயர் அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் இன்று மாலை 5 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிற மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பிரல்ஹாத் ஜோஷி, பியூஷ் கோயல் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Tags : Fed , union cabinet
× RELATED கொள்ளை சம்பவம்: தனிப்படைகள்...