×

கல்பனா சாவ்லாவைத் தொடர்ந்து விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி பெண்: ஆந்திராவைச் சேர்ந்தவர்!!

ஹைதராபாத் : இந்தியாவில் பிறந்து விண்வெளிக்கு செல்லும் 2வது பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார் சிரிஷா பந்தலா. அவரது விண்வெளி பயணம் குறித்த அறிவிப்பு ஆந்திர மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியர்களையும் பெருமைப்பட செய்துள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரில் 1987ல் முரளிதர - அனுராதா தம்பதியினருக்கு மகளாக பிறந்த சிரிஷா, வளர்ந்து எல்லாம் அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் தான். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் ஏரோனாட்டிக்கல் பொறியியல் பட்டம் பெற்ற சிரிஷாவுக்கு சிறு வயது முதலே விண்வெளி பயணத்தின் மீது ஆர்வம் அதிகமாம்.

2015ல் விர்ஜின் காலக்ட்டிக் நிறுவனத்தின் பொது மேலாளர் பணியில் சேர்ந்த சிரிஷா பந்தலா, தற்போது அதே நிறுவனம் செலுத்தும் விண்கலத்தில் வரும் 11ம் தேதி விண்வெளிக்கு பயணிக்க உள்ளார். மெக்சிகோவில் தொடங்கும் இந்த பயணத்தில் சிரிஷா பந்தலாவுடன் மேலும் 5 பேர் விண்வெளிக்கு பயணிக்க உள்ளனர். கல்பனா சாவ்லாவைத் தொடர்ந்து இந்தியாவில் பிறந்து விண்வெளிக்கு செல்லும் 2வது பெண் என்ற பெருமை சிரிஷாவிற்கு கிடைத்துள்ளது. சிரிஷாவின் விண்வெளி பயணம் அவரது குடும்பத்தினரோடு ஒட்டுமொத்த இந்தியர்களையும் பெருமை அடைய செய்துள்ளது.ராகேஷ் ஷர்மா, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை தொடர்ந்து விண்வெளிக்கு செல்லும் 4வது இந்தியராக சிரிஷா பந்தலா உள்ளார்.விண்வெளி பயணம் மேற்கொள்ளும் சிரிஷாவிற்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags : Kalpana Chawla ,Andhra Pradesh , சிரிஷா பந்தலா
× RELATED ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு, ஆயில் என...