×

படேல் சிலை அருகே ஏரியிலிருந்து 194 முதலைகள் இடமாற்றம்

அகமதாபாத்: குஜராத்தின் நர்மதா மாவட்டத்தின் கெவடியாவில் சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒற்றுமையின் சிலை என அழைக்கப்படும் இந்த சிலை அமைந்துள்ள பகுதி மிகப்பெரிய சுற்றுலா தலமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. சிலையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள், சிலைக்கு அருகே உள்ள பஞ்ச்முலி ஏரியில் படகு சவாரியும் சென்று வருகிறார்கள்.

ஆனால் இந்த ஏரியில் நூற்றுக்கணக்கான முதலைகள் உள்ளன. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, கடந்த 2 ஆண்டுகளாக முதலைகளை இடமாற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஏரியில் 60க்கும் மேற்பட்ட கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கூண்டுகள் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 194 முதலைகள் பிடிக்கப்பட்டுள்ளன. இவை சர்தார் சரோவர் அணையிலும், பாதுகாப்பு மையங்களிலும் விடப்பட்டுள்ளன.


Tags : Patel statue , Patel statue
× RELATED இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான...