×

அமெரிக்கா ஹாங்காங்க், சீனாவிலிருந்து 4 சரக்கு விமானத்தில் ஆக்சிஜன் கருவிகள் வருகை

சென்னை: அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாங்காங், சீனாவில் இருந்து 4 சரக்கு விமானங்களில் 50 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சென்னை வந்தன. கொரோனா வைரஸ் 2ம் அலை இந்தியா முழுவதும் பெருமளவு பரவி வருகிறது. ஏற்கனவே நாட்டின் வட மாநிலங்களில் பெருமளவு தாக்குதல் நடத்திய கொரோனா வைரஸ், தற்போது தென்மாநிலங்களிலும் வீரியம் எடுத்துள்ளது. அந்த நிலையில் தமிழகத்திலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட  மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முழு ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உள்ளது. எனவே ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதிலும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஆக்சிஜனை தமிழகம் கொண்டு வருவதற்கும் முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கிடையே தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளை பெருமளவு வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன. அரசும் அதற்கு அனுமதி அளித்துள்ளது. அதேபோல் சென்னை விமான நிலையத்திலும் வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து விமானங்களில் வரும் மருத்துவம் சம்பந்தப்பட்ட கருவிகள், உபகரணங்கள், ஆக்சிஜசன் உற்பத்தி செய்யும் கருவிகள் போன்றவைகள் வந்தால், அவைகளுக்கு முன்னுரிமையளித்து, சுங்கச்சோதனை, முகவரி சரி பார்த்தல் என்ற பெயரில் காலதாமதம் செய்யாமல்  உடனடியாக டெலிவரி கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுங்க அதிகாரிகள் கூடுதலாக நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் இப்பணி சென்னை விமான நிலையத்தில் தொடார்ந்து நடந்து வருகிறது.இந்நிலையில்  நேற்று முன்தினம் இரவு அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஹாங்காங்கிலிருந்து 4 சரக்கு  விமானங்கள்  சென்னை பழைய  விமான நிலைய சரக்கக பிரிவுக்கு  வந்தன. அந்த விமானங்களில் 50 ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள் வந்து இறங்கின. நள்ளிரவாக இருந்தாலும், மற்ற பணிகளை எல்லாம் நிறுத்திவைத்துவிட்டு, இந்த 50 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளையும் உடனடியாக டெலிவரி கொடுத்து அனுப்பினர். மருத்துவ உபகரணங்கள் டெலிவரி செய்வதில் காலதாமதம் ஏற்படாமல் செயல்படுவதை கண்காணிக்க சுங்கத்துறை மற்றும் விமானநிலைய அதிகாரிகள் இணைந்து ஒரு குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மும்பையில் இருந்து வந்த தடுப்பூசிகள்இதற்கிடையே நேற்று பகல் 2 மணிக்கு  மும்பையில் இருந்து வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 96,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. தடுப்பு ஊசிகள் 8 பார்சல்ல் வந்தன. சென்னை விமான நிலைய அதிகாரிகள், தடுப்பூசி பார்சல்களை பெற்றுக்கொண்டனர். அதில் 48,000 டோஸ் தடுப்பூசிகளை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் மீதி 48,000 டோஸ் தடுப்பூசிகளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தனர்….

The post அமெரிக்கா ஹாங்காங்க், சீனாவிலிருந்து 4 சரக்கு விமானத்தில் ஆக்சிஜன் கருவிகள் வருகை appeared first on Dinakaran.

Tags : USA ,Hong Kong, China ,Chennai ,UK ,
× RELATED அமெரிக்காவில் பிரபலமாகி வரும் பன்றிக்குட்டி யோகா..!!