×

உயிரை பறிக்கும் விலை உயர்வு: சரத்குமார் வேதனை

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் அறிக்கை: மக்களின் சுமைகளை குறைத்து சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஆரோக்கியமான கட்டமைப்பை உருவாக்கி கொடுப்பதே மத்திய-மாநில அரசுகளின் முதல் கடமை. அக்கடமையை மறந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோலிய பொருட்களின் விலையை தங்கள் இஷ்டத்துக்கு நிர்ணயித்து, நாள்தோறும் விலையை உயர்த்தி கொண்டே போவது ஏழை மக்களை சித்ரவதை செய்வதற்கு ஒப்பாகும். பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம் மக்களின் அத்தியாவசிய தேவைகளான அரிசி, காய்கறி, மளிகை பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமையும் என மத்திய அரசுக்கு தெரியாதா?

இந்த தொடர் விலை உயர்வு மக்களை பசியால் உயிர்போகும் நிலைக்கு தள்ளும் என்பதை மத்திய அரசு உணரவேண்டும். மக்களுக்கு நிவாரணம் வழங்குவது போல் வழங்கி, பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வின் மூலம் அதை அரசே பறித்துக் கொள்வது வழிப்பறிக் கொள்ளை போன்றதுதான். எனவே, மக்களின் வலிகளை உணர்ந்து, பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Saratkumar , Life-threatening price hike: Sarathkumar pain
× RELATED வனப்பகுதிக்குள் ரயில் தண்டவாளம்...