×

நடிகை யாமி கவுதமுக்கு அமலாக்கத்துறை சம்மன்

சென்னை: தமிழில் கவுரவம், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை யாமி கவுதம். சமீபத்தில்தான் தனது காதலரை அவர் மணந்தார். இந்நிலையில் விசாரணைக்காக ஆஜராகும்படி அமலாக்கத்துறை யாமி கவுதமுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. நடிகை யாமி கவுதமின் வங்கிக் கணக்கில் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாகவும், அவருடைய கணக்கில் 1.5 கோடி ரூபாய் அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பதாகவும் அமலாக்கத்துறை கூறியிருக்கிறது. இது குறித்து விளக்கம் கேட்பதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அடுத்த வாரம் அவர் அமலாக்கத்துறையின் அலுவலகத்திற்கு வரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே ஒரு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராஜவில்லை எனவும் தெரியவந்திருக்கிறது. எனவே இந்த முறை அவர் ஆஜராகவில்லை எனில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Tags : Enforcement ,Yami Gautam , Enforcement department summons actress Yami Gautam
× RELATED ரூ.7 கோடி மோசடி வழக்கு: மஞ்சும்மல்...