ஈரோடு: போதிய தடுப்பூசிகளை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யாததால் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் குறைந்த அளவே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பல இடங்களில் மக்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்துக்கு குறைந்த அளவே தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளதால் 80 மையங்களில் தலா 100 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.
தடுப்பூசி மையங்களில் மக்கள் விடிய விடிய காத்திருந்து டோக்கன்களை பெற்றனர். தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் அதிக அளவில் ஆர்வமுடன் வந்தபோதிலும் முதலில் வந்த 100 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.
ஊரடங்கு தளர்வால் இயல்பு நிலை திரும்பி உள்ளதால் பாதுகாப்பான முறையில் பணி இடங்களுக்கு சென்றுவர எதுவாக அனைவருக்கும் தடுப்பூசிகளை அரசு செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கவும் அவர்கள் வலியுறுத்தினார்.