×

பிரான்ஸ், நெதர்லாந்திலிருந்து பிறந்தநாள் பரிசாக வந்த போதை மாத்திரைகள்

சென்னை: பிரான்ஸ், நெதர்லாந்து நாடுகளிலிருந்து பிறந்தநாள் பரிசு என்ற பெயரில் சரக்கு விமானதில் வந்த ரூ.5.25 லட்சம் மதிப்புடைய 105 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பழைய விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்த சரக்கு விமானத்தில் வந்த கொரியர் பார்சல்களை விமான நிலைய சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் நெதர்லாந்து நாட்டிலிருந்து ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஹரி என்பவரின் முகவரிக்கு பிறந்தநாள் பரிசு பொருட்கள் இருப்பதாக ஒரு பார்சல் வந்திருந்தது. அதே விமானத்தில் பிரான்ஸ் நாட்டிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒருவருக்கு பிறந்தநாள் பரிசு என்று மற்றொரு பார்சல் வந்திருந்தது.

ஒரே சரக்கு விமானத்தில் அடுத்தடுத்து 2 பாா்சல்கள் பிறந்தநாள் பரிசுகள் என்று வந்திருந்ததால் சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, பார்சல்களில் உள்ள செல்போன் எண்களை அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். அந்த எண்கள் உபயோகத்தில் இல்லை என்று வந்தது. இதையடுத்து அந்த முகவரிகளை ஆய்வு செய்தனர். அதுவும் போலி முகவரி என்று தெரியவந்தது. இதையடுத்து நேற்று காலை 2 பார்சல்களையும் அதிகாரிகள் திறந்து சோதனையிட்டனர். அந்த இரு பார்சல்களிலும் மொத்தம் 105 போதை மாத்திரைகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.5.25 லட்சம். இதையடுத்து சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து போதை மாத்திரைகளை கைப்பற்றினர்.


Tags : France ,Netherlands , Drug pills that came as a birthday gift from France, the Netherlands
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...