சமூக வலைதளங்களில் துஷ்பிரயோகம் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் பேஸ்புக், கூகுள் வாக்குமூலம்

புதுடெல்லி: சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் வெளியாவதை தடுக்க நாடாளுமன்ற நிலைக்குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக பேஸ்புக், டிவிட்டர், கூகுள், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பிரதிநிதிகள் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி எம்பி. சசிதரூர் தலைமையிலான தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, டிவிட்டர் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியாவுக்கான கொள்கை இயக்குனர் ஷிவ்நாத் துக்ரால், பொது ஆலோசகர் நம்ரதா சிங் ஆகியோர் நேற்று நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராகினர். இதே போல கூகுள் நிறுவன அதிகாரிகளும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

டிவிட்டருக்கு 2 நாள் கெடு

ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அமெரிக்க சட்ட விதிமுறைகளை மீறியதாக சமீபத்தில் அவரது கணக்கை ஒரு மணி நேரம் டிவிட்டர் நிர்வாகம் முடக்கியது சர்ச்சையானது. இதுதொடர்பாக டிவிட்டர் இந்தியா நிர்வாகம் 2 நாளில் பதிலளிக்க நாடாளுமன்ற குழு உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More