×

பெரம்பலூர் மாவட்டத்தில் கரும்பு பயிர்களை தாக்கும் மர்ம நோய்-ஆய்வு நடத்த விவசாயிகள் வேண்டுகோள்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் கரு ம்புப் பயிர்களைத் தாக்கும் மர்ம நோயால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆய்வுநடத்த தமிழ்நாடு கரும்புவிவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி போன்ற மானாவாரிப் பயிர்களே அதிகம் சாகுபடி செய்யப் பட்டு வந்தாலும், நஞ்செய் பயிர்களிர் ஒன்றான, பணப்பயிரான கரும்புப் பயிரும் குறிப்பிட்ட அளவுக்கு சாகுபடி செய்ய ப்பட்டு வருகிறது.

இதனை நம்பியே வேப்பந்தட்டை தா லுக்கா எறையூரில் பொதுத் துறை சர்க்கரை ஆலையும், உடும்பியத்தில் தனியார் சர்க்கரை ஆலையும் இயங் கி வருகிறது. எறையூரில் உள்ள ஜவஹர்லால் நேரு பொதுத்துறை சர்க்கரை ஆலைக்காக மட்டுமே பெரம் பலூர்,அரியலூர் மாவட்டங் களில் பெரம்பலூர், எறை யூர், வி.களத்தூர், லெப்பை க்கு டிகாடு,அகரம்சீகூர், புது வேட்டக்குடி, கிருஷ்ணாபு ரம், தாமரைப்பூண்டி ஆகிய 8 கரும்புக் கோட்டங்களில் இருந்து சுமார் 4 முதல் 5ஆயிரம் கரும்புவிவசாயிக ளால் 7ஆயிரத்திற்கு மேற் பட்ட ஏக்கரில்பயிரிடப்பட்டு பதிவு செய்யப்பட்ட 1.75 லட் சம் டன் கரும்புகள் அரவை க்காக எடுத்துக் கொள்ளப் படுகிறது.

இதில் பெரம்பலூர் மாவட்ட த்தில் புதுவேட்டக்குடி கோ ட்டத்திற்கு உட்பட்ட துங்கபு ரம், புதுவேட்டக்குடி, கோவி ல் பாளையம், காடூர் கிராம ங்கள், அரியலூர் மாவட்டத் திற்கு உட்பட்ட பாலையூர், பழமலைநாதபுரம், நமங்கு ணம் உள்ளிட்ட கிராமங்க ளில் மட்டும் 3ஆயிரம் ஏக்க ருக்கு மேல் கரும்புப் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வரு கிறது. இவற்றில் ஜனவரி யில் அறுவடைசெய்து மறு தாம்புக்கு விடப்பட்ட கரும்புப் பயிர்களிலும், பிப்ரவரி மாதத்தில் புதிதாக நடவுசெ ய்யப்பட்ட கரும்புப் பயிர்களிலும் புதிதாக மர்மநோய் பாதிப்புஏற்பட்டுள்ளது.

குறி ப்பாக 5அடி உயரத்திற்கு வ ளர்ந்து இருக்கவேண்டியக் கரும்புப் பயிர்கள் ஒரு அடி உயரத்திலேயே மஞ்சள் மற் றும் பழுப்புநிறத்தில் வளர் ச்சியின்றித் தோகைகள் தரையில் சாய்ந்து காணப்ப டுகிறது. இந்த நோய்க்கா ன பெயர், தன்மை அறியா ததால் கரும்பு விவசாயிக ள் முழிபிதுங்கித் திண்டாடி வருகின்றனர். ஒரு கோட்ட த்தில் மட்டுமே 500ஏக்கருக் குமேல் பாதித்துள்ளதால் இதர கோட்ட கரும்புவிவசா யிகளும் கலக்கத்தில் உள்ளனர்.

இதுகுறித்து கோவில் பா ளையம் கிராமத்தைச் சேர் ந்த தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் மாவ ட்ட துணைச் செயலாளர் ஞானசேகரன் தெரிவித்த தாவது: புதுவேட்டக்குடி க ரும்பு கோட்டத்திற்கு உட்ப ட்ட ஆறேழு கிராமங்களில் கரும்புப் பயிர்களில் மர்ம நோய் தாக்கியுள்ளது.ஆளு யரத்திற்கு வளர்ந்திருக்க வேண்டிய கரும்புப் பயிர்க ள் ஒருஅடியிலேயே நிற்கி றது. செவ்வழுகல்நோய் தா க்கியதுபோல் காணப்பட்டாலும் பாதிப்பு குறித்து வே ளாண்மைத் துறையினர் முறையாக ஆய்வுசெய்து விவசாயிகளுக்கு விளக்கி ட வேண்டும். பாதிப்புக்கு ஏற்ற நிவாரணம் பெற்றுத் தரவேண்டும் என்றார்.

Tags : Perambalur , Perambalur: Farmers in Perambalur district have been shocked by a mysterious disease affecting sugarcane crops. Tamil Nadu to study
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி