முன்னாள் போலீஸ் அதிகாரி, அவரது மனைவி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை; தீவிர சிகிச்சையில் அவரது மகள்: ஜம்முவில் பயங்கரம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரி, அவரது மனைவி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். முன்னாள் போலீஸ் அதிகாரி பயஸ் அகமது, மனைவி ராஜ பேகம் ஆகியோா் வீடுபுகுந்து சட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த போலீஸ் அதிகாரியின் மகள் ராஃபியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் போலீஸ் அதிகாரியை சுட்டுவிட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதியை ராணுவ வீரர்கள் தேடி வருகின்றனர். 

அந்த பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு விமானப்படை தளத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நிலையில் முன்னாள் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று விமான தளத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கும் இந்த சம்பவத்திற்கும் ஏதும் சம்மந்தம் இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த போலீஸ் அதிகாரியின் மகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Related Stories:

>