×

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: கோயில்களில் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.  இதுகுறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோயில் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
* முதுநிலை கோயிலின் நுழைவு நிலை பதவிகளுக்கான தகுதியான நபர்கள், முதுநிலை அல்லாத கோயில்களில் இல்லாத நேர்வுகளில் அத்தகைய பணியிடங்கள் பிற நியமன முறைப்படி அதாவது வெளியில் இருந்து நபர்களை கொண்டு நிரப்பப்படலாம்.  காலி பணியிடங்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி, ஊதியம் மற்றும் இதர விவரங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரும் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

* விண்ணப்பங்களை கோரும் அறிவிப்பிற்கேற்ப சமய நிறுவனத்தின் வலைதளங்கள் மற்றும் அறிவிப்பு பலகை, கோயில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், ஊராட்சி மன்றத்தில், நகராட்சியில், மாநகராட்சியில் மற்றும் அருகில் உள்ள கோயில்களில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். வரப்பெற்ற விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியின்மைகள் ஏதும் உள்ளதா என்பதை பரிசீலித்தும் தகுதிவாய்ந்த நபர்களுக்கு மட்டும் அனுப்பபட வேண்டும்.

* தகுதியற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பத்தினை நிராகரித்து அதற்கான காரணத்தை அவர்களுக்கு தெரிவிக்க வே்ணடும். நேர்முக தேர்வினை விதியில் தெரிவித்துள்ள படி நேர்காணல் குழு அமைத்து நேர்காணல் நடத்தப்பட வேண்டும். நேர்காணலில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு விண்ணப்பதாரரின் தர வரிசை கோயில் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட வேண்டும். தரவரிசை அடிப்படையில் அறங்காவலர் குழுவினர் தீர்மானம் பெற்று தகுதியானவர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும். நியமனம் தற்காலிகமானது என்றும் ஆணையரின் சீராய்வுக்கு உட்பட்டது எனவும் கண்டிப்பாக நியமன ஆணையில் குறிப்பிட வேண்டும்.

* பணியாளர் நியமனம் குறித்து உரிய விவரங்களுடன் 15 தினங்களுக்குள் ஆணையருக்கு அறிக்கை அனுப்பபட வேண்டும்.

* காலி பணியடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்கு விதி 13,14ல் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இந்த நடைமுறைகளை பின்பற்றி காலி பணியிடங்களை எவ்வித புகாருக்கும் இடமின்றி நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Department of Hindu Religious Affairs ,Kumarakuruparan , Department of Hindu Religious Affairs, Temple, Commissioner Kumarakuruparan
× RELATED கோயிலுக்கு கிடைக்கும் வருவாய்...