×

கொரோனா தொடர்பான அச்சம் குறைந்த பிறகே பள்ளி திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

திருச்சி: கொரோனா தொடர்பான பெற்றோர்களின் அச்சம் குறைந்த பிறகே, பள்ளி திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆன்லைன் வகுப்பிலேயே சென்றுவிட்டன. நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளை திறக்க திட்டமிட்டிருந்த தமிழக அரசு, இரண்டாம் அலையின் தீவிரத்தால் அந்த முடிவை கைவிட்டது. தற்போது பாதிப்பு குறைந்து இருக்கும் நிலையில் பள்ளிகள் திறக்கப் படுமா? என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.

தெலுங்கானாவில் ஜூலை 1 ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. பிற மாநிலங்களும் இதனை பின்பற்ற வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. இத்தகைய சூழலில் தான், ஜூலை மாதம் பள்ளிகளை திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.

முதலில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கிய பின்னர் படிப்படியாக பிற வகுப்புகளுக்கு தொடங்க அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில், கொரோனா தொடர்பாக பெற்றோர்களின் அச்சம் குறைந்து பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். முதல்வர் உத்தரவு பிறப்பித்தால் பள்ளிகளை திறக்க தயாராக இருப்பதாக ஏற்கனவே அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona ,Minister ,Mahesh Poyamozhi , School reopening will be discussed only after fears over corona subside: Minister Mahesh
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...